தமிழக அமைச்சரவை இன்று மாலை கூடுகிறது!! - இடைக்கால பட்ஜெட் குறித்து ஆலோசிக்க வாய்ப்பு!!

     -MMH

தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. தமிழக சட்டப்பேரவை வரும் 2 ஆம் தேதி கூடுகிறது. அது தொடர்பாக விவாதிக்க அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

மே மாதத்தில் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தற்போது இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். அதில் இடம்பெறவுள்ள முக்கிய அம்சங்கள் குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.

நாளைய வரலாறு செய்திக்காக,

-V.ருக்மாங்கதன்,சென்னை.

Comments