புதிய உச்சத்தில் பெட்ரோல் விலை.. அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்!

     -MMH
     சென்னையில் பெட்ரோல் விலை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஒரு லிட்டர் 88 ரூபாயை தாண்டி விற்பனையாகிறது.

இன்றைய நிலவரப்படி, சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் 22 காசு விலை உயர்ந்து 88 ரூபாய் 7 காசுக்கு விற்கப்படுகிறது. டீசல் லிட்டருக்கு 23 காசு விலை அதிகரித்து 80 ரூபாய் 90 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

பெட்ரோல் விலை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு விலை ஏற்றம் கண்டுள்ளது. முன்னதாக கடந்த 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 4ஆம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் 87 ரூபாய் 39 காசுக்கு விற்பனையானது. ஓராண்டில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்ந்துள்ளது.

கொரோனா பொதுமுடக்கத்தின் போது பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 15புள்ளி 98 டாலராக வீழ்ச்சி கண்ட நிலையில், தற்போது 56 டாலரில் வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெய் உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளதும், அதன் விலை ஏற்றமுமே பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கக் காரணமாகக் கூறப்படுகிறது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

-V.ருக்மாங்கதன், சென்னை.

Comments