ஒரு ஊராட்சியில் ஒரு கோடி ரூபாய் ஊழல்!! – மு.க.ஸ்டாலின் விமர்சனம்

                                             -MMH

     ஒரு ஊராட்சியில் ஒரு கோடி ரூபாய் ஊழல்  ஊழல் மணியான வேலுமணியை விரட்டியடிப்போம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்

கோவை, ஐன. 2 – கிராம ஊராட்சிகளில் சுகாதார பணிகளுக்காக வாங்கப்பட்ட பொருட்களில் ஒரு ஊராட்சியில் ஒரு கோடி ரூபாய் என தமிழகத்தில் 13 ஆயிரம் ஊராட்சியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக தற்போது இது வெளிவந்துள்ளது. ஊழல் மணியான வேலுமணியை விரட்டியடிக்க வருகிற சட்டமன்ற தேர்தலை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கோவையில் நடைபெற்ற மக்கள் கிராமசபை கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக சாடினார். 

கோவை தொண்டாமுத்தூர் தொகுதி உட்பட்ட தேவராயன்பாளையத்தில் மக்கள் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கோவை வந்தார். தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள தேவராயபுரத்தில் நடைபெற்ற மக்கள் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்பதற்றார். முன்னதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தேவராயபுரம் வரை வழிநெடுக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் திமுகவினர் பங்கேற்று எழுச்சிகரமான வரவேற்பை அளித்தனர். 

இதனைத்தொடர்ந்து தேவராயபுரத்தில் மக்கள் கிராமசபையில் கூட்டத்தில் பங்கேற்றார். இதில் அப்பகுதி மக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். குறிப்பாக விவசாய பகுதியான தொண்டாமுத்தூர் பகுதியில் காட்டுப்பன்றியால் ஏற்படும் பிரச்சனை மற்றும் நீர்வளத்தை மேம்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர். இதனைத்தொடர்ந்து பேசிய மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் கரப்சன், கலெக்சன் ஆட்சி நடைபெறுவதாக குற்றம்சாட்டினார். பல்வேறு ஊழல் முறைகேடுகள் குறித்து பட்டியலிட்டு பேசினார். குறிப்பாக ஊராட்சிகளில் சுகாதாரப்பணிகளுக்காக வாங்கப்படும் உபகரணங்களில் பல்வேறு ஊழல்கள் நடைபெற்றுள்ளது. இது கோவையை சேர்ந்த டேனியல் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெற்றுள்ளார். இதில் சாக்கடை கொத்து, பினாயில், பிளிச்சிங் பவுடர், மோட்டல் போன்றவைகள் சந்தையில் விற்கிற விலையை காட்டிலும் பல மடங்கு அதிகமான விலை கொடுத்து வாங்கியுள்ளனர். இதன்படி பார்த்தால் ஒரு ஊராட்சியில் மட்டும் ஒரு கோடி ரூபாய் ஊழல் நடைபெற்று இருக்கலாம். அந்தவகையில் பார்த்தால் தமிழகத்தில் 13 ஆயிரத்திற்கும் அதிகமான ஊராட்சி உள்ளது. இதில் மட்டும் 13 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்று இருக்கலாம். ஊழல் மணியான வேலுமணிக்கு உரிய பாடத்தை கற்பிக்க வேண்டும். அத்தகைய வாய்ப்பை வரும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார். இந்நிகழ்வில் திமுக பொறுப்பாளர் கார்த்திக் எம்.எல்.ஏ (மாநகர கிழக்கு) பையா கவுண்டர் (மாநகர மேற்கு) சி. ஆர் ராமச்சந்திரன் (புறநகர் வடக்கு) தென்றல் செல்வராஜ் (புறநகர் தெற்கு) சேனாதிபதி (புறநகர் கிழக்கு)  உள்ளிட்ட தலைவர்கள் உடனிருந்தனர். முன்னதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொகுதி என்பதால் இந்த கிராமசபை கூட்டத்தில் குழப்பம் ஏற்படுத்த அதிமுகவினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். இருப்பினும் திமுகவின் மக்கள் கிராமசபை கூட்டம் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்புடன் வெற்றிகரமாக நடைபெற்றது.

-சீனி, போத்தனூர்.

Comments