சிங்கம்புணரியில் மலைப்பாம்பு! மலைபாம்பைப் பிடித்து மாலையாக அணிந்துகொண்ட வாலிபர்!

 

-MMH

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் சேவுகபெருமாள் அய்யனார் கோவில் அருகே குடியிருப்புப் பகுதியில் 10 நீளமுள்ள ஒரு பெரிய மலைப்பாம்பு அடிக்கடி தென்பட்டுள்ளது. எனவே, மக்கள் அச்சத்தில் இருந்துள்ளனர். நேற்று இரவு அதே மலைப்பாம்பு வழக்கம்போல் சாலையை கடந்துள்ளது. அப்போது அதன் வழியாக வந்த லாரி ஓட்டுனர் மலைபாம்பை கண்டவுடன் லாரியை நிறுத்தியுள்ளார் அருகே உள்ள குடியிருப்புவாசிகள் பாம்பைப் பார்த்தவுடன், இன்று மலைபாம்பை பிடித்துவிட வேண்டும்,

என்று ஏராளமானோர் திரண்டு தேடினர். அப்போது வேலிக்குள் மறைந்து இருந்த மலைப்பாம்பை உயிருடன் பிடித்த வாலிபர் பிடித்து மாலையாக அணிவித்துக் கொண்டார். இதைப் பார்த்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்பு பாம்பை சாக்குப் பையில் போட்டு வனப்பகுதியில் கொண்டுபோய் விட்டனர். மலைபாம்பை பிடித்ததால் அப்பகுதி பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு அடைந்தனர்.

-அப்துல்சலாம், திருப்பத்தூர்.

Comments