சாலையில் ஓடும் பாதாளசாக்கடை! தஞ்சை மாநகராட்சியின் மெத்தனம்!!

 

     -MMH

தஞ்சாவூரின் மிகப் பிரதான பகுதியான ரயிலடி மற்றும் மேரிஸ் கார்னர் அருகில் உள்ள பாதாள சாக்கடை கடந்த 10 நாட்களாக வெளியேறி சாலையில்  ஓடிக்கொண்டிருக்கிறது. 

தஞ்சாவூரின் மிகப் பிரதான பகுதியாக விளங்குவது மேரிஸ் கார்னர். மேரிஸ் கார்னர் வழியாகத்தான் அனைத்து பேருந்துகள் மற்றும் தஞ்சையின் புதிய பேருந்து நிலையத்திற்கு செல்லும் வாகனங்கள் திருச்சி செல்லும் வாகனங்கள் செல்ல முடியும் .அந்த சாலையில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு அசுத்த நீர் முழுவதும் வெளியேறி கொண்டிருப்பது அந்தப் பகுதி வழியாக கடந்து செல்பவர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது .அருகில்  இரண்டு தேவாலயங்களும் இரண்டு பள்ளிகளும் ஒரு திருமண மண்டபம் மற்றும் வியாபார நிறுவனங்கள் அனைத்தும் நிறைந்துள்ள பகுதியாகும். 

மேரிஸ் கார்னர் மற்றும் கல்குளம் பகுதிக்கு அந்த கழிவு நீரானது சென்று அங்கு உள்ள வீடுகளின் வாசலில் தேங்கி நிற்பது அசுத்த கிருமிகள் மற்றும் கொசுக்கள் உற்பத்திக்கு வழிவகுக்கும். க வெளியேறும் கழிவு நீரின் ஒரு பகுதி தேவாலயத்தின் உள்ளே சென்று  தேவாலயத்தை சுற்றி குளம் போல் தேங்கி நிற்கின்றது. அந்தப் பகுதியில் உள்ள மக்களிடம் விசாரித்த போது இந்த பாதாள சாக்கடை நீரானது சமுத்திரம் ஏரியில் கலக்கும்.

ஆனால் தற்போது பெய்த அதிக மழையினால் சமுத்திரம் ஏரி நிரம்பி வழிவதால் அனைத்து பாதாள சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேற முடியாமல் நாகரிகப் பகுதிகளில் ஆங்காங்கே வெளியேறிக் கொண்டிருக்கிறது என்று வேதனையுடன் தெரிவித்தனர். மாநகராட்சி அதிகாரிகளிடமும்  சுகாதார  பணியாளர்களிடமும் பொதுமக்கள் குறைகளை தெரிவித்துள்ளனர் இருந்த போதிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த அசுத்த நீர் வெளியேறுவது இந்த காலகட்டத்தில் மேலும் பல தீங்கான நோய்களை மக்களிடத்தில் பரப்பும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. இதை கருத்தில் கொண்டு மாநகராட்சி அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

 நாளைய வரலாறு செய்திக்காக,

-V.ராஜசேகரன்,தஞ்சாவூர்.

Comments