போலியோ சொட்டு மருந்து முகாமை துவக்கிவைத்த எஸ்.பி.வேலுமணி!!

     -MMH

கோவையில் உள்ளாட்சிதுறை அமைச்சர் எஸ் பி வேலுமணி போலியோ சொட்டு மருந்து முகாமை துவக்கிவைத்தார்.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ளாட்சிதுறை அமைச்சர் எஸ் பி வேலுமணி போலியோ நோய் தடுப்பு சொட்டு மருந்து முகாமை துவக்கி வைத்து குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுத்தார்.. தொடர்ந்து அவர்,கோவை உக்கடம் பகுதியில் குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டபடவுள்ள குடியிருப்பு அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டு அதற்கான பணிகளை துவக்கி வைத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு வீடுகள் கட்டி தருவதில் மகிழ்ச்சியளிப்பதாகவும்,அனைவருக்கும் வீடுகட்டும் திட்டத்தில் கோவை மாவட்ட்த்தில் தான் அதிகளவில் கட்டபட்டுள்ளதாக கூறிய அவர் 116 கோடி மதிப்பில் மேலும் வீடுகள் கட்டப்படவுள்ளதாகவும்,வீடுகள் கட்ட ஆணை வழங்கிய முதல்வருக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார்.

- சீனி,போத்தனூர்.

Comments