கனடா நாட்டு அஞ்சல் தலையில் மன்னார்குடி!

 

-MMH

கனடா நாட்டில் தமிழர்கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். அதனால் தமிழர்களுக்கு அந்நாட்டில் சிறப்பு இடமுண்டு. தமிழர்களின் பண்டிகைகளை கொண்டாடுவது, அறிவிப்புகளை தமிழில் வெளியிடுவது என கனடா அரசு பல்வேறு செயல்களை செய்து வருகிறது.

அதன் தொடர்ச்சியாக கனடா அரசு தமிழர்களை பெருமைப்படுத்தும் வகையில் ஒரு தபால் தலையை வெளியிட்டு உள்ளது. அதில் தமிழர்களின் வீரத்தைப் போற்றும் விதமாக சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் சின்னங்கள் மற்றும் கலை உருவங்களும் இடம் பிடித்திருக்கிறது.

முக்கியமாக மன்னார்குடி பெரிய கோவிலின் கருட கம்பமும் அந்த அஞ்சல் தலையில் இடம்பெற்றுள்ளது. இதற்கு கனடா வாழ் தமிழர்களும், மன்னார்குடி மக்களும் பெருமிதத்துடன் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

-ரைட் ரஃபிக்.

Comments