மாலையில் மழை காலையில் புழுதி - கண் எரிச்சலில் வாகன ஓட்டிகள்..!!

     -MMH

     கோவை மாவட்டம் தமிழகம் முழுவதும் சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுவதால் கடந்த சில மாதங்களாகவே மழை பெய்து வருவதால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.  இது ஒருபுறமிருக்க சாலைகளில் இருக்கும் மழை நீர் காய்ந்தவுடன் கனரக வாகனங்கள் செல்லுகையில் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கண்களில் மண் புழுதியை தூவிய நிலையில் செல்வதால் சாலையில் செல்லும் இருசக்கர வாகனங்களும் நடைபயணமாக செல்லும் மனிதர்களுக்கும் பெரும் இடையூறாக இருக்கிறது என்று மிகுந்த வருத்தத்துடன் கூறி வருகின்றனர்.

அனைத்து சாலைகளும் சரி செய்து விட்டால் இந்த நிலையில் இருந்து தப்பிக்கலாம் என்று புலம்புகின்றனர் பொதுமக்கள்.

-ஈசா, கோவை.

Comments