காவல் துறையினர் போல் நடித்து பட்டப்பகலில் கொள்ளை..! தஞ்சையில் அதிர்ச்சி.!!!

-MMH

     தஞ்சை கீழவாசல் பகுதியை சேர்ந்தவர் மலைய பெருமாள் . வயது 60. இவர் கீழவாசல் பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். அவருடைய மகன்  சரவணன் அவருக்கு உதவியாக மளிகைக் கடையில் இருந்து வருகிறார். கடந்த வாரம் எட்டாம் தேதி அவரது வீட்டிற்கு  வந்த 3 பேர்   தங்களை காவல்துறையினர் என அறிமுகப்படுத்திக் கொண்டனர்.  உங்களது கார் விபத்து ஏற்படுத்தி விட்டது. சிசிடிவி கேமராவில் நாங்கள் அதை பார்த்து பதிவு எண்ணை வைத்து உங்களை கண்டுபிடித்தோம் ஆதலால் தங்கள் மீது வழக்கு பதியாமல் இருக்க 40 லட்ச ரூபாய் நீங்கள் தரவேண்டும் என்று பேரம் பேசியுள்ளனர். அதற்கு அவர் எங்களது கார் எந்த விபத்தையும் ஏற்படுத்தவில்லை என்று தெரிவித்துள்ளார். 

அதன் பின்னர் காவல் துறையினர் போல் வந்தவர்கள் அவரையும் அவரது வீட்டில் உள்ளவர்களையும் மாடியில் அழைத்துச் சென்று கட்டிவைத்து அடித்து உதைத்துள்ளனர் பின்னர் வீட்டில் இருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.  அதன் பின்னர் வீட்டின் உரிமையாளர் கிழக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார். 

அதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அருகில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு காட்சிகளை பார்த்தனர்.  அதை வைத்து கொள்ளையர்களின் உருவங்களையும் அவர்கள் பயன்படுத்திய  மோட்டார் வாகனத்தின்  எண்ணையும் கண்டுபிடித்து குற்றவாளிகளில் ஒருவனை கைது செய்துள்ளனர் .அவன் பெயர் வைத்தீஸ்வரன் என்பதும்  தென்காசி பகுதியை சேர்ந்தவன் என்பதும் தெரியவந்துள்ளது. கொள்ளையர்கள் காவல்துறையினர் போல் வந்து நடித்து கொள்ளையடித்து சென்றது கீழவாசல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாளைய வரலாறு செய்திக்காக,

-V.ராஜசேகரன் தஞ்சாவூர்.

Comments