உர மூட்டைகள் பதுக்கிவைத்துள்ள குடோனுக்கு சீல்!! - கோவை அருகே பரபரப்பு!!

     -MMH

     கோவை மாவட்டம் பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள  கெடிமேடு பகுதிக்குட்பட்ட  குடோனில் விவசாயிகளுக்கு மானிய விலையில்  வழங்க வேண்டிய உர மூட்டைகளை பதுக்கி வைத்திருப்பதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 


தகவலின் பேரில் பொள்ளாச்சி வட்டாட்சியர் தணிகைவேல் தலைமையில் வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் வேளாண்துறை அதிகாரிகள் விரைந்து சென்று குடோனை  சோதனையிட்டனர். சோதனையில் 40 கிலோ எடை கொண்ட 950 மூட்டைகள் இருப்பது தெரியவந்தது. 

வெளி மாவட்டங்களில் இருந்து சட்டவிரோதமாக கடத்தி  குடோனில் பதுக்கி வைத்து வேறு பெயரில் அண்டை மாநிலங்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து உர மூட்டைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் குடோனுக்கு சீல் வைத்தனர்.


மேலும் தலைமறைவாக உள்ள குடோன் மேலாளர் சந்தோஷ், உரிமையாளர் மும்மூர்த்தி ஆகிய இருவரையும் அதிகாரிகள் தேடி வருகின்றனர். விவசாயிகளுக்கு மானியமாக வழங்க கூடிய உர மூட்டைகளை பதுக்கி விற்பனை செய்த இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட உர மூட்டைகளின்  மதிப்பு சுமார் 12 லட்சம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

-M.சுரேஷ்குமார், கோவை தெற்கு.

Comments