கொரோனா காலகட்டத்தில் பலருக்கும் உதவி செய்த நடிகர் சோனுசூட் மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு!!

     -MMH 

      கொரோனா காலகட்டத்தில் பலருக்கும் உதவி செய்து மக்கள் மனதில் கதாநாயகர் ஆன நடிகர் சோனுசூட் மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கொரோனா காலத்தில் உதவி என கேட்டவருக்கெல்லாம் சேவை செய்து அனைவராலும் பாராட்டப்பட்டவர் நடிகர் சோனு சூட். தன்னுடைய 10 கோடி ரூபாய் சொத்துக்களை அவர் அடமானம் வைத்து ஏழை மக்களுக்கு உதவி செய்தது, அனைவரது மனதிலும் நீங்கா இடத்தை பெற்று கொடுத்தது.

இந்த நிலையில் மும்பையில் உள்ள அவரது 6 மாடி குடியிருப்பு பகுதியை, அனுமதியின்றி ஹோட்டலாக மாற்றியதாக நடிகர் சோனு சூட் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால் இந்த குற்றச்சாட்டை நடிகர் சோனு சூட் உடனடியாக மறுத்துள்ளார்.

இந்த குடியிருப்பு கொரோனா காலக்கட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் தங்குவதற்காக ஹோட்டலாக பயன்படுத்தப்பட்டது எனவும், இதற்காக மாநகராட்சி உரிய அனுமதி பெற்றுள்ளேன் எனவும், நான் எப்போதும் சட்டத்தை மீறுபவன் இல்லை என்று சோனு சூட் கூறியுள்ளார். மேலும் இந்த புகாரை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளேன் என்றும் சோனு சூட் கூறி உள்ளார்.

-சுரேந்தர்.

Comments