பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளை கைது செய்யக் கோரி திமுக கூட்டணி கட்சிகளுடன் கண்டனப் போராட்டம்!!

     -MMH 

     கோவை மாவட்டம் பொள்ளாச்சி பாலியல் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட உண்மை குற்றவாளிகளை விரைவாக கைது செய்யக் கோரியும் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு விரைவாக கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனக் கோரியும் திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் இணைந்து பொள்ளாச்சி காந்தி சிலை அருகே கண்டனப் போராட்டம் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கூட்டணி கட்சிகளின் முக்கிய பொறுப்பாளர்களும் கட்சித் தொண்டர்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பேசிய திமுக  மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு ஆளும் அதிமுக  அடைக்கலம் கொடுத்து வருவதாக  குற்றம் சாட்டினார். மேலும் குற்றவாளி என கருதப்படும் அருள் ஆனந்தத்துடன் பொள்ளாச்சி ஜெயராமன் நெருங்கிய தொடர்பில் இருப்பதை உறுதி செய்திட இருவரும் இணைந்து இருக்கும் புகைப்படத்தை  காண்பித்து அதிமுக அரசுக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்தார். மேலும் அவர் பேசுகையில் பொள்ளாச்சி ஜெயராமன் பொள்ளாச்சி  தொகுதியை விட்டு வேறு தொகுதிக்கு சென்று விடுவார் என தெரிவித்தார்.

-சுரேஷ் குமார், கோவை தெற்கு. 

Comments