பொன்னமராவதியில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு குழந்தைகள் கடத்தல் தொடர்பான விழிப்புணர்வுக் கூட்டம்!

 -MMH

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் பேரூராட்சிக்குச் சொந்தமான திருமணமண்டபத்தில், ஆட்டோ ஓட்டுனர்களுக்கு குழந்தைகள் கடத்தல் தொடர்பான விழிப்புணர்வு பற்றி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சி செயல் அலுவலர் தனுஷ்கோடி கனமுத்து தலைமையும், வருவாய் ஆய்வாளர் ஜோதி முன்னிலையும் வகித்தனர். 

பயணிகள் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு குழந்தைகள் கடத்தல் தொடர்பாகவும், இளம் பெண்கள் மற்றும் குழந்தைகளை எவ்வாறு பாதுகாப்பது, குழந்தைகள் தடுப்பு திருமணம், குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல், குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பினை  உறுதிப்படுத்துவது பற்றிய நடவடிக்கைகளை மாவட்ட துணை இயக்குநர் குழந்தைவேலு,

விளக்கி கூறினார். இதில் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்க தலைவர்கள், உறுப்பினர்கள், காமராஜ் நகர் டாக்டர் ஏபிஜெ அப்துல் கலாம் மக்கள் நலச்சங்கத்தின் மாநில பேச்சாளர் பெர்னாட்ஷா, கெளரவத் தலைவர் செல்வராணி சின்னையா, பெண் தூய்மைப் பணியாளர்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகப் பணியாளர் சசிகலா, சைல்டு லைன் திருமயம் களப்பணியாளர் ராஜலெட்சுமி, அரிமளம் களப்பணியாளர் வசந்தபாரதி, பொன்னமராவதி களப்பணியாளர் பூங்கொடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் இதில் குழந்தைகள் தடுப்பு திருமணம் பற்றிய உறுதிமொழி ஏற்கப்பட்டு 1098 சைல்டு லைன் விளம்பர பலகை வைக்க உதவிய தொழிலதிபர்கள் அர்ஜூனன், கணேசன், ரவி, டாக்டர் ஏபிஜெ அப்துல் கலாம் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோருக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. கலந்து சிறப்பித்த அனைவருக்கும் சசிகலா நன்றி தெரிவித்துக் கொண்டார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-M.சதாம் உசேன்.

Comments