கோவையில் ஆட்டோ மீது கார் மோதி விபத்து!!

  -MMH

      கோவை துடியலுரை அடுத்த தொப்பம்பட்டி பிரிவு அருகே சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது பின்னால் வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் ஆட்டோ கவிழ்ந்து சாலையில் நடுவில் இருந்த சோலார் மின் விளக்கு கம்பத்தில் மோதி சேதமடைந்தது. இதில் பலத்த காயமடைந்த ஆட்டோ ஓட்டுநர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மோதிவிட்டு நிற்காமல் தப்பி ஓடிய கார் குறித்து துடியலூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து நடந்த சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

கோவை துடியலூரை அடுத்த தொப்பம்பட்டி பிரிவு பகுதியில் கோவையை நோக்கி ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது பின்னால் TN 40 C 5151 என்ற பதிவு எண் கொண்ட மாருதி சிப்ட் கார் அதிவேகமாக வந்து ஆட்டோவில் பின் பகுதியில் பயங்கரமாக மோதியுள்ளது.

ஆட்டோ மீது கார் மோதும் சிசிடிவி காட்சி 

இதில் ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து சாலையில் நடுவில் இருந்த சோலார் மின் கம்பத்தில் மோதி சேதமடைந்தது. இதில் சோலார் மின் கம்பம் முறிந்து கீழே விழுந்தது.

இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் பகுகாயமடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆட்டோ மீது மோதிய TN 40 C 5151 என்ற பதிவு எண் கொண்ட மாருதி சிப்ட் கார் விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் அதிவேகமாக அங்கிருந்து சென்றுவிட்டது. ஆனால் மோதிய வேகத்தி காரின் முன்பக்க நம்பர் பிளேட் அங்கேயே கழண்டு விழுந்துவிட்டது.

இதனை வைத்து துடியலூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற கார் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் விபத்து ஏற்பட்ட இடத்தில் அருகில் இருந்த ஒரு கடையில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமராவில் ஆட்டோ மீது அதிவேகமாக வந்த கார் மோதும் காட்சிகள் வெளியாகியுள்ளனர்.

-சீனி, போத்தனூர்.

Comments