காணும் பொங்கல் - கோவை குற்றாலத்தில் குதூகலம்..!

 

-MMH

கோவை மேற்குத் தொடர்ச்சி மலையில் அடர்வனத்தில் அமைந்துள்ளது குற்றாலம் நீர்வீழ்ச்சி. அதில், குளித்து மகிழ்வதற்காக புத்தாண்டு, தீபாவளி, பொங்கல், கோடை விடுமுறை உள்ளிட்ட நாட்களில் வழக்கத்தை விட சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகம் காணப்படும். 

ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வருகை தந்து குளித்து குதுாகலித்தனர். காணும் பொங்கல் நாளான நேற்று, காலை 9:00 மணி முதலே பயணிகளின் வருகை அதிகமாக இருந்தது. பெரும்பாலானோர் குடும்பமாக வந்திருந்தனர். மழை சாரலுடன் பொங்கிய நீர்வீழ்ச்சியில் குளித்து குதுாகலித்தனர். பின்னர், எடுத்து வந்திருந்த உணவை கூட்டாக உண்டு மகிழ்ந்தனர்.

நாளையவரலாறு செய்திக்காக,

-ஹனீப்,தொண்டாமுத்தூர்.

Comments