காரைக்குடியில் பாதாள சாக்கடை பணிகளில் முறைகேடு நடந்திருக்க வாய்ப்பு!!

     -MMH

     காரைக்குடியில் பாதாள சாக்கடை பணிகளில் முறைகேடு நடந்திருக்க வாய்ப்பு. உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி சிவகங்கை எம்.பி.முதல்வருக்கு கடிதம்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நகராட்சியில் பாதாள சாக்கடை பணிகளுக்காக அரசு 112 கோடியே 53 லட்சம் ரூபாய் ஒதுக்கி, பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன.

இதுவரை பணிகள் முடிக்கப்பட்ட 39 பகுதிகளில் ரூ.67 கோடிக்கு சாலைகள் போடப்பட்டுள்ளதாகவும், பாதாள சாக்கடை ஆள்நுழைவு தொட்டிகளை இணைக்கும் பைப்புகள் அமைத்து அதன் மேல் கான்கிரீட் போடுவதற்கு மட்டும் ரூ.20 கோடி ஒதுக்கபட்டுள்ளதாகவும், இவ்வாறு அமைக்கப்பட்ட சாலைகளில் தரமான காங்கிரீட் போடாததால் அதில் செல்லும் வாகனங்களின் சக்கரம் பதியும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் பல விபத்துகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், காரைக்குடி நகராட்சியை சேர்ந்த தகவல் சட்ட ஆர்வலர் டாக்டர் எ.ஹெச்.பிரகாஷ் பொதுமக்கள் சார்பாக புகார் மனு அளித்து, அது குறித்து செய்தியும் வெளிவந்துள்ளது.

இந்த தரமற்ற சாலை அமைத்ததில் முறைகேடுகளும் ஊழலும் நடந்திருக்க வாய்ப்பு இருப்பதாகவே தோன்றுகிறது இது தொடர்பாக தாங்கள் உரிய விசாரணை நடத்தி தரமற்ற சாலை அமைத்த கான்ட்ராக்டர் மற்றும் இந்த பாதாள சாக்கடை பணிகளை முழுவதும் கவனிக்க தவறிய அரசு அதிகாரிகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், மேலும் பாதாள சாக்கடை பணிகளை விரைந்து உடனடியாக முடித்துக் கொடுத்து பொதுமக்களுக்கு உதவிடுமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் எம்பி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நேற்று  கடிதம் எழுதியுள்ளார். கடிதத்துடன் டாக்டர் எஹெச் பிரகாஷ் பொதுமக்கள் சார்பாக அளித்துள்ள புகார் மனுவையும் இணைத்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

- அப்துல்சலாம், திருப்பத்தூர்.

Comments