நாளைக்கு எல்லாம் கிடைக்காது கடை லீவு!!

 -MMH

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து தமிழ்நாடு மாநில வாணிப கழகம் மதுபானக் கடைகள் அதனுடன் இணைக்கப்பட்ட மதுபானக் கூடங்கள் மற்றும் அனைத்து பொழுதுபோக்கு மனமகிழ்மன்றம் போன்ற கிளப்களில் செயல்படுகூடிய  மதுக்கூடங்கள் என அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் வரும் 15, 26 மற்றும் 28ம் தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கலெக்டர் ராஜாமணி கூறுகையில், ''வரும் 15ம் தேதி - திருவள்ளுவர் தினம், 26ம் தேதி-குடியரசு தினம் மற்றும் 28ம் தேதி-வள்ளலார் நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்நாட்களில் மதுக்கடைகள் மற்றும் மதுக்கூடங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. விதிமுறைகளுக்கு முரணாக மேற்குறிப்பிட்ட தேதிகளில் மதுபானங்கள் விற்பனை செய்பவர்கள் மீது சட்ட விதிகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி கிழக்கு.

Comments