இட ஒதுக்கீடு வழங்கக் கோரி பாமக சார்பில் ஆர்ப்பாட்டம்!!

 

-MMH

வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரி பாமக சார்பில் திருப்பத்தூர் ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தாலுகா ஒன்றிய அலுவலகத்தின் முன்பு  வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரி பாட்டாளி மக்கள் கட்சியினர்  கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். அதனைத் தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயராமனிடம் கோரிக்கை மனுவை வழங்கினார்கள். 

இந்த ஆர்ப்பாட்டம் மாநில துணை பொதுச்செயலாளர் திருஞானம் தலைமையில் நடைபெற்றது. மாநில பொறுப்பாளர் தங்க அய்யாசாமி கண்டன உரையாற்றினார். மாவட்ட செயலாளர் ஆல்பர்ட் ராஜ், மாவட்ட தலைவர் பூக்கடை முருகன், மாவட்ட அமைப்பு தலைவர் முருகன், இளைஞரணி வசந்த் ஆறுமுகம், நிர்வாகிகள் வாசுதேவன், சேகர், சரவணன், மீனாட்சி மற்றும் மாவட்ட ஒன்றிய நகர கிளை கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

-அப்துல்சலாம், திருப்பத்தூர்.

Comments