தமிழகத்திலேயே எங்குமில்லாத புதிய முயற்சி! ஆதரவற்றோர் உடல் அடக்கத்தலம் மன்னார்குடியில் திறப்பு!

     -MMH

     வாழும் காலத்தில் மற்றவர்களால் புறக்கணிக்கப்பட்டு, சுற்றித்திரிந்து தனது மரணத்துக்குப் பின்னர் என்ன ஆகப் போகிறோம் என்பதை பற்றி கூட சிந்திக்காமல், ஆதரவற்ற நிலையில், உரிமை கோரப்படாமல் கைவிடப்பட்டோரின் உடல்களை அடக்கம் செய்வதற்கு மன்னார்குடியில் ஒரு அடக்கத்தலம் உருவாக்கப்பட்டுள்ளது.

"நகராட்சி அமைதி வனம்" என்ற பெயரில் மன்னார்குடி சேரன்குளம் பாமணி ஆற்றின் கரையில் (கோன பெருமாள் கோவில் பகுதியிலிருந்து சேரன்குளம் செல்லும் வழி) உள்ள மயானத்தின் அருகே சுமார் 5000 சதுர அடி பரப்பளவில் இது அமைக்கப்பட்டுள்ளது.

இது தமிழகத்திலேயே எங்கும் இல்லாத புது முயற்சியாகும். இதனை இப்பகுதி முக்கிய பிரமுகர்கள் பார்வையிடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அதையொட்டி மரக்கன்றுகள் நடப்பட்டன.


இந்த நிகழ்வுக்கு நேசக்கரம் அமைப்பின் தலைவர் காவிரி திரு, எஸ். ரங்கநாதன் அவர்கள் தலைமை வகித்தார். மன்னார்குடி டிஎஸ்பி திரு. இளஞ்செழியன், நகராட்சி சார்பில் நகரமைப்பு ஆய்வாளர் திரு.விஜயகுமார் ஆகியோர் பங்கேற்று மரக்கன்றுகளை நடவு செய்தனர்.

நிகழ்வில் மயான தொழிலாளர்கள், மன்னார்குடி அரசு மருத்துவமனை சவக்கிடங்கு ஊழியர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுனர் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். முடிவில் நேசக்கரம் ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் நன்றி கூறினார்.


ஆதரவற்ற நிலையில் இறந்து போவது வாழ்வின் கொடுமை என்றால் அதனை அடக்கம் செய்வது சமூகக் கடமை என்கின்ற உணர்வோடு இந்த அடக்கஸ்தலம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் மன்னார்குடி வர்த்தக சங்கத் தலைவர் ஆர்.வி.ஆனந்த், அரசியல் கட்சி பிரமுகர் திரு.சிங்காரவேலு, ஜேசிஐ அமைப்பு முன்னணித் தலைவர் திரு.வி.எஸ்.கோவிந்தராஜன், ரோட்டரி சங்க தலைவர் திரு.சுதாகரன், லயன்ஸ் சங்க தலைவர் திரு.குணசேகரன், நுகர்வோர் அமைப்பு தலைவர் திரு.பத்மநாபன், பசுமை கரங்கள் அமைப்பு தலைவர் திரு.கைலாசம், ரோட்டரி முன்னாள் தலைவர் திரு.ரமேஷ், ரெட் கிராஸ் சொசைட்டி மாநிலக்குழு உறுப்பினர் திரு.கண்ணன், jci  அமைப்பு தலைவர் எம்.சி.பிரகாஷ், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் திரு.சேதுராமன், வர்த்தக பிரமுகர் திரு.பிரேமா பாலு, மற்றும் நேசக்கரம் ஒருங்கிணைப்பாளர்கள் வானிலை திரு.செல்வகுமார், ஆசிரியர் திரு.என்.ராஜப்பா, திருவாளர்கள் பாரதிதாசன்,ஜெயக்குமார், மிஸ்டர் கூல் செல்வகுமார், சிரில், அறவாழி, கார்த்திக் கண்ணன், தீனா உட்பட பலர் பங்கேற்றனர்.

இந்த அடக்க ஸ்தலத்தை உருவாக்க உதவி செய்த திரு.வள்ளுவன் மரச்செக்கு நிறுவன உரிமையாளர் திரு செல்வபூபதி, ஊடகவியலாளர் திரு.ஸ்ரீதர், திரு.பி.ஆர்.விஜயபாஸ்கர், அரசியல் கட்சி பிரமுகர் திரு.சிங்காரவேலு, நர்சரி உரிமையாளர்  பிரபாகரன்,   மற்றும் உமா எலக்ட்ரிகல்ஸ் நிறுவனத்துக்கு அனைவரும் நன்றி தெரிவித்தனர்.

இத்தகைய அமைதி வனம் அமைக்க அனுமதி அளித்த மன்னார்குடி நகராட்சி ஆணையர் திருமதி. கமலா அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-ரைட் ரபீக், திருவாரூர்.

Comments