நாய்க்கு சொத்தை எழுதி வைத்த தந்தை..! அதிர்ச்சியில் பிள்ளைகள்....!!

-MMH

தனது மனைவி மற்றும் குழந்தைகளை விட்டுவிட்டு விவசாயி ஒருவர் தன்மீது பாசமாக இருக்கும் நாய்க்கு தனது சொத்துக்களை எழுதி வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தின் பரிபாடா கிராமத்தில் வசிக்கும் ஓம் நாராயண வர்மா என்பவருக்கு ஐந்து மகன்கள் உள்ளனர். 

கடந்த சில நாட்களாகவே மகன்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டதால் கோபத்தில் இருந்த நாராயண வர்மா தனது 18 ஏக்கர் நிலத்தில் தான் வளர்த்துவந்த செல்ல நாயான ஜாக்கிக்கும், மீதமுள்ள சொத்துக்களை தனது மனைவி சம்பா வர்மாவுக்கும் எழுதி வைத்துள்ளார். 

மகன்களின் நடத்தைப் பிடிக்காததாலும், தனது பேச்சை அவர்கள் கேட்காததாலுமே தன்மீது பாசமாய் இருந்து சொன்ன பேச்சை கேட்கும் நாய்க்கு எழுதி நிலத்தை எழுதி வைத்துள்ளார். அதோடு, தனது வாரிசாக நாய் ஜாக்கியையே உயிலில் எழுதி வைத்துள்ளார். 

அந்த உயிலில் எனது செல்ல நாய் ஜாக்கி என்மீது பாசமாக இருக்கிறது. அதனை எனது மனைவி பாசமாக பார்த்துக்கொள்கிறார். அதனால், அவருக்கும் சொத்துக்களை எழுதி வைத்துள்ளேன். எனது மரணத்திற்குப் பிறகு மனைவி சம்பா வர்மாவுக்கும் நாய் ஜாக்கிக்கும்தான் எனது சொத்துக்கள் செல்லவேண்டும். நாய்க்கு யார் சேவை செய்கிறார்களோ அவர்களதான் சொத்தின் அடுத்த வாரிசுகள் என்று எழுதி வைத்து, அவரது பேச்சை கேட்காத மகன்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

-நம்ம ஒற்றன்.

Comments