பொள்ளாச்சி துணை சபாநாயகர் V.ஜெயராமன் சாலை விரிவாக்க பணியில் அடிக்கல் நாட்டினர்..!!

 

 -MMH

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த பொன்னாவரம் பகுதியில் சாலை விரிவாக்க பணிகளுக்கு துணை சபாநாயகர் அடிக்கல் நாட்டினர். பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதி பொள்ளாச்சி நகர பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு கனரக வாகனங்கள் செல்லும் வகையில் ஆச்சிபட்டி சக்திமில் அருகில் துவங்கி சங்கம்பாளையம் பொன்னாபுரம் தாளக்கரை முத்தூர் நல்லூர் வழியாக ஜமீன் ஊத்துக்குளி கைகாட்டி சென்றடைகின்ற வகையில் ,சுமார் 9 கிலோமீட்டர் தூரம் நீளத்தில் இரண்டு வழி சாலையாக மேற்கு புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என சட்ட மன்ற உறுப்பினரும் துணை சபாநாயகரும் பொள்ளாச்சி V ஜெயராமன் அவர்கள் சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்ததன் பயனாக  முதலமைச்சர் திரு எடப்பாடி K பழனிச்சாமி அவர்கள் 50 கோடியை 35 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் சாலை விரிவாக்கம் செய்ய நிதி வழங்கினார்.

இதனை தொடர்ந்து இன்று மேற்கு புறவழிச்சாலை அமைக்க  தமிழக சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி V ஜெயராமன் அவர்களால் பூமி பூஜை செய்யப்பட்டு பணிகள் துவக்கி வைக்கப்பட்டது.உடன் முன்னாள் அமைச்சர் செ.தாமோதரன் மற்றும் அதிகாரிகள் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி கிழக்கு.

Comments