1 முதல் 8ஆம் வகுப்பு வரை ஆல் பாஸ் !தேர்வு ரத்து , ஆனால் அசைன்மென்ட்கள் மூலம் மதிப்பீடு!

 

-MMH

     1 முதல் 8ஆம் வகுப்பு வரை ஆல் பாஸ் !தேர்வு ரத்து , ஆனால்  அசைன்மென்ட்கள் மூலம் மதிப்பீடு! புதிய வழிமுறையில் தேர்ச்சி செய்ய டெல்லி மாநில அரசு அசத்தல் அறிவிப்பு!

டெல்லியில் 8ஆம் வகுப்பு வரை தேர்வின்றி ஆல்பாஸ் செய்வதற்கான புதிய வழிமுறையை அம்மாநில அரசு அறிமுகம் செய்துள்ளது. மாணவர்களுக்கு 9 முதல் 12ஆம் வகுப்பு வரை மிக முக்கியமான காலகட்டம். அதற்கான அடிப்படை கேஜி முதல் 8ஆம் வகுப்பு வரை நடத்தப்படுகிறது. அடிப்படை கல்வியை கற்கும் 8ஆம் வகுப்பு வரை பெரும்பாலும் மாணவர்களை ஃபெயில் போடுவது கிடையாது.

இந்நிலையில் கொரோனா காரணமாக அவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க டெல்லி அரசு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. அதன்படி அசைன்மென்ட்கள் மூலம் மட்டும் மதிப்பீடு செய்து தேர்ச்சி அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

-Ln. இந்திராதேவி முருகேசன், சோலை. ஜெய்க்குமார்.

Comments