தேனி மாவட்டத்தில் 10 இடங்களில் முன்களப் பணியாளர்களுக்கு கோரோனா தடுப்பூசி.!!

     -MMH
     தேனி மாவட்டத்தில் 10 இடங்களில் கொரோனா தடுப்பு முன்களப் பணியாளா்களுக்கு, இரண்டாம் கட்டமாக தடுப்பூசி செலுத்தும் முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.

மாவட்டத்தில் கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுவரும் 8,024 மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறை பணியாளா்களுக்கு, முதல் கட்டமாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஜனவரி 16-ஆம் தேதி தொடங்கியது. இதில், தற்போதுவரை மொத்தம் 2,164 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இரண்டாம் கட்டமாக கொரோனா தடுப்பு முன்களப் பணியாளா்கள் 7,354 பேருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பெரியகுளம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, கம்பம், போடி, சின்னமனூா் அரசு மருத்துவமனைகள், தேனி பொம்மையகவுண்டன்பட்டி, ராஜதானி, கடமலைக்குண்டு, தேவாரம், கூடலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் என 10 இடங்களில் கொரோனா தடுப்பு முன்களப் பணியாளா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது என்று, மாவட்ட ஆட்சியா் ம. பல்லவி பல்தேவ் தெரிவித்தாா்.

நாளைய வரலாறு செய்திக்காக, 

-ஆசிக்,தேனி.

Comments