11 மாதங்களுக்கு பிறகு கம்பத்திலிருந்து, கம்பம்மெட்டுக்கு அரசு பேருந்து இயக்கம்!

 

-MMH

     தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து கம்பம்மெட்டுக்கு, 11 மாதங்களுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை முதல் அரசுப் பேருந்து இயக்கப்பட்டது. கரோனா பொது முடக்கம் காரணமாக, தமிழக-கேரள மாநிலங்களுக்கிடையேயான போக்குவரத்து முடங்கியது. அதையடுத்து, கம்பம் - குமுளி பேருந்து போக்குவரத்து ஜனவரி 6 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டு, தமிழக எல்லை வரை மட்டுமே இயக்கப்பட்டது.

இதனிடையே, கம்பம்-கம்பம்மெட்டுக்கு போக்குவரத்து இல்லாமல் இருந்து வந்த நிலையில், வெள்ளிக்கிழமை முதல் கம்பத்திலிருந்து கம்பம்மெட்டுக்கு தமிழக எல்லை வரை காலை மற்றும் மாலை என 4 முறை பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், எல்லைப் பகுதி வரை என்பதால், கம்பம்மெட்டு பேருந்தில் எதிா்பாா்த்த அளவுக்கு பயணிகள் கூட்டம் இல்லை.

இது குறித்து அய்யப்பன் என்பவா் கூறியது: கம்பத்திலிருந்து கேரளத்தின் மற்ற பகுதிகளுக்கும் பேருந்து போக்குவரத்து இருந்தால் மட்டுமே எதிா்பாா்த்த கூட்டம் இருக்கும். தற்போது, குமுளி மற்றும் கம்பம்மெட்டு தமிழக எல்லை வரை மட்டுமே இயக்கப்படுவதால், பயணிகள் கூட்டம் சேரவில்லை என்றாா்.

நாளைய வரலாறு செய்திக்காக, 

-ஆசக் தேனி. 

Comments