11 மணிநேரம் குளத்தில் கிடந்த சடலம்! வழக்கம்போல் காவல்நிலைய எல்லைப் பிரச்சனை!

-MMH

     கோவை நரசாம்பதி குளத்தில் கிடந்த சடலத்தை, போலீஸ் ஸ்டேஷன் எல்லை பிரச்னையால், 11மணி நேரத்துக்கு பின் போலீசார் கைப்பற்றினர்.கோவை, நகராஜபுரம் பேரூர் ரோட்டில் உள்ள, நரசாம்பதி குளத்தில், சடலம் கிடப்பதாக, நேற்று காலை, 7:00 மணிக்கு, வடவள்ளி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தலையில், பிளாஸ்டிக் கவர் அணிந்து, கயிற்றால் கட்டப்பட்ட நிலையில், சடலம் காணப்பட்டது.சடலம் கிடந்த இடம், செல்வபுரம் - வடவள்ளி போலீஸ் ஸ்டேஷன்களின் எல்லைப் பகுதி என்பதால், வேடபட்டி வி.ஏ.ஓ., செந்தில்குமார் வரவழைக்கப்பட்டு, இடம் அளவீடு செய்யப்பட்டது. அந்த இடம், தெலுங்குபாளையம் வருவாய் கிராமத்துக்கு உட்பட்டது என, தெரியவந்தது.இது, செல்வபுரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்டது என்பதால், வடவள்ளி போலீசார், செல்வபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அங்கு வந்த செல்வபுரம் போலீசார், சடலம் கிடக்கும் பகுதி, எங்கள் எல்லைக்கு உட்பட்டதல்ல என கூறிச் சென்றனர். இதில், வடவள்ளி போலீஸ் ஸ்டேஷன், கோவை ரூரல் பகுதியிலும், செல்வபுரம், கோவை மாநகர பகுதியிலும் உள்ளது. எல்லை பிரச்னையால், 11 மணி நேரம், எந்த போலீசாரும், சடலத்தை எடுக்கவில்லை. மாலை, 6:00 மணிக்கு, மாநகர போலீசார், ரூரல் போலீசார் என, இரு தரப்பினரும், சம்பவ இடத்துக்கு வந்தனர். அதன்பின், வடவள்ளி போலீசார், உடலைக்  கைப்பற்றி, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். சம்பவ இடத்தை, மாநகர துணை கமிஷனர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்.வடவள்ளி போலீசார் கூறுகையில், 'வடவள்ளி ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட இடத்தில், சடலம் கிடக்கவில்லை. இருப்பினும், மாலை நேரம் ஆனதால், உடலை கைப்பற்றி வழக்கு பதிந்துள்ளோம். வழக்கு, செல்வபுரம் போலீஸ் ஸ்டேஷன் மாற்றப்படும்' என்றார்.

-Ln. இந்திராதேவி முருகேசன், சோலை. ஜெய்க்குமார்.

Comments