கோவையில் வரும் 12ஆம் தேதி கட்டுமானம் சார்ந்த தொழில் துறையினர் வேலை நிறுத்தப் போராட்டம்!!

     -MMH

     கோவை: கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கண்டித்து கோவையில் வரும் 12ஆம் தேதி கட்டுமானம் சார்ந்த 60ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுமானம் சார்ந்த தொழில் துறையினர் வேலை நிறுத்தப் போராட்டம் கூட்டு நடவடிக்கை குழுவில் தீர்மானம்

கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள தனியார் அரங்கில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு கட்டுமான நிறுவனங்களின் முக்கிய நிர்வாகிகள் அடங்கிய கூட்டு நடவடிக்கை குழுவில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "கட்டுமான துறையில் ஏற்பட்டுவரும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண தொடர்ந்து நாங்கள் வலியுறுத்தி வருகிறோம் மேலும் covid-19 வைரஸ் தோல்வியில் இருந்து மீண்டு வரும் சூழலில் அதிவேகமாக ஸ்டீல் மற்றும் சிமெண்ட் விலை உயர்ந்து வருகிறது. இது கட்டுமானத் துறையில் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. 

நாட்டிலேயே வேலை வாய்ப்புகளை வழங்குவதில் இரண்டாம் இடம் வகிப்பது கட்டுமானத்துறை தற்போது இந்த மூலப்பொருட்களின் விலை உயர்வால் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஏற்கவே போடப்பட்டுள்ள ஒப்பந்தங்களின் படி கட்டுமானத்தை அமைத்துக் கொடுக்கும் பட்சத்தில் தற்போது அதிகரித்துவரும் விலை உயர்வு காரணமாக பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய சூழல் உள்ளது. மேலும் ஒப்பந்தத்தின் படி செயல்படுவதில் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகின்றோம்.

ஏற்கனவே இரும்பின் விலை டன்னுக்கு 40 ஆயிரம் ரூபாயாக இருந்தது தற்போது 65 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது தற்போது சிமெண்டின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது. பணிகளை பாதியில் நிறுத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளோம் எனவே உடனடியாக மத்திய மாநில அரசுகள் இதில் கவனம் செலுத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். 

ஒரு கட்டுக்குள் கொண்டு வருவதற்கு ஆவணம் செய்ய வேண்டும். எனவே இதனை வலியுறுத்தி வரும் 12ஆம் தேதி அன்று நாடு முழுவதும் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனர். அதன்படி கோவை மாவட்டத்தில் கிட்டத்தட்ட 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். மேலும் இந்த விலையேற்றத்தை கட்டுப்படுத்த ஒழுங்குமுறை ஆணையத்தை உருவாக்க வேண்டும். இல்லையென்றால் எங்களுடைய இந்த அடையாள வேலை நிறுத்த போராட்டம் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வோம்". என்றனர்.

- சீனி,போத்தனூர்.

Comments