2000 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட மம்மியில் இருந்து தங்க நாக்கு வெளியே வந்துள்ளது!!

     -MMH

எகிப்து நாட்டில் டபோசிரிஸ் மேக்னா என்ற இடத்தில் சாண்டோ டுமிங்கோ என்ற பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சுமார் பத்து வருடங்களாக மம்மி குறித்து ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து அங்கு பழமை வாய்ந்த கட்டிடம் ஒன்றில் ஏராளமான மம்மிகள் புதைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து ஆராய்ச்சி சென்று கொண்டிருந்தபோது அவர்களுக்கு ஆச்சரியமான சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது மொத்தம் 16 மம்மிகளை வெளியே தோண்டி எடுத்த போது ஒரு மம்மியின் வாயில் தங்கத்தாலான நாக்கு காணப்பட்டுள்ளது.

இதையடுத்து அந்த மம்மியை எடுத்து ஆராய்ச்சி செய்து பார்த்தபோது, அது இரண்டாயிரம் வருடங்களுக்கு பழமையானது என்றும் அதாவது கிரேக்கர்களும், ரோமானியர்களும் வாழ்ந்த காலகட்டத்தைச் சேர்ந்தது என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த மண்டை ஓடு மற்றும் உடல் பகுதியில் எந்தவித சேதமும் இல்லாமல் அப்படியே இருந்துள்ளது. இது குறித்து ஆராய்ந்தபோது பழங்கால எகிப்து நாட்டில் இறந்தவர்களின் உடலோடு தங்கத்தை வைத்து அடக்கம் செய்வது வழக்கமாக இருந்தது.

இந்த வகையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட மம்மியும் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் தங்க நாக்கு என்பது புதுமையாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், அந்த மம்மியை புதைக்கும் போது உண்மையான நாக்கை வெட்டி எடுத்துவிட்டு அதற்கு பதிலாக தங்க வைத்திருக்கலாம் என்றும், இவ்வாறு செய்வதன் மூலம் அவர்கள் இறந்த பிறகு கடவுளான ஒசிரிஸ் உடன் பேசுவார்கள் என்று நம்பிக்கை இருந்தது. மேலும் இந்த மிகவும் பாதுகாப்பான முறையில் வைத்து அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

-சுரேந்தர்.

Comments