23 ஆண்டுகளாக பணியாற்றும் தொகுப்பூதிய பணியாளர்களாக, பணிநியமனம் கோரி சென்னையில் தொடர்போராட்டம்!!

-MMH 

     தமிழக அரசுப்பள்ளிகளில் பயிலும் சுமார் 2 லட்சம் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு சிறப்புக் கல்வி , பயிற்சிகள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் பெற்று தரும் சிறப்பு பயிற்றுநர்கள் , தங்களை பகுதிநேர பணியாளர் என்ற நிலையிலிருந்து  பணி நிரந்தரமாக்கிட வேண்டும்  உள்ளிட்ட மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த ஜனவரி 29 முதல், சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பார்வைகுறைபாடு , செவித்திறன் குறைபாடு , கை கால் இயக்க குறைபாடு , ஆட்டிசம் , மூளை முடக்கு வாதம் , மனவளர்ச்சி குறைபாடு கொண்டவர்கள் ஆகிய மாற்றுத்திறன் மாணவர்களுக்கு இச்சிறப்பு பயிற்றுநர்கள், கடந்த 1998 முதல் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பூதிய தற்காலிக பணியாளர்களாக இருந்து கல்வியினை போதித்து வருகின்றனர்.

ஆரம்பத்தில் 16000-க்கும் மேற்பட்டோர் நியமனம் செய்யப்பட்டு தற்போது 12,500 பேர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்காக மாதம்  10,000 ரூபாய் ஊதியம் வழங்கப்படுகிறது. இதனை உயர்த்தி , அரசு தங்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும் எனக்கோரி மாநிலம் முழுவதிலும் இருந்து 500-க்கும் மேற்பட்டோர் 15 நாட்களாக  இப்போராட்டத்தில் பங்கேற்றுவருகின்றனர், ஆனால் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் இன்னும் இவர்களின் கோரிக்கையினை செவிமடுத்தபாடில்லை,என்று கூறப்படுகிறது. 

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

 -நவாஸ்,புதுப்பேட்டை சென்னை.

Comments