சகோதரர்கள் 3 பேர் தண்ணீரில் மூழ்கி பலி!! - சோகத்தில் ஊர் மக்கள்!!

    -MMH 
     கேரளா மாநிலம் பாலக்காடு  மாவட்டத்திலுள்ள குனிச்சேரியில் சகோதரர்களான 3 குழந்தைகள் தண்ணீரில் மூழ்கி பலி. 

கரியக்காடு ஜஸீரின் மகன்களான ஜின்ஷாத் (12), ரின்ஷாத்(7), ரிஃபாஸ் (3)ஆகிய மூன்று குழந்தைகள் உயிரிழந்தார்கள். இன்று காலையில் தான் இந்த சோகம் நடந்துள்ளது. 

வீட்டினரிகே உள்ள பள்ளிவாசலுக்கு பின்புறமுள்ள குட்டை அருகே  விளையாடிக் கொண்டிருத சிறுவர்கள் கைய்யில் ஒட்டிய சேற்றை கழுகுவதற்காக குட்டைக்கு சென்றிருக்கிறார்கள். அப்போது  எதிர்பாராத விதமாக மூன்று பேரும் திடீர் என்று தவறி  தண்ணீருக்குள் விழுந்தார்கள். இதனை பார்த்த ஒரு சிறுவன் அலறியடித்துக்கொண்டு வீட்டில் தகவல் தெருவித்தான். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்து குழந்தைகள் 3 பேரையும் தண்ணீரிலிருந்து மீட்டனர். அனால் மூன்று சகோதரர்களும் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள்.

குழந்தைகளின் உடல்கள் பாலக்காட்டிலுள்ள ஒரு மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

-நம்ம ஒற்றன்.

Comments