இன்னும் சற்று நேரத்தில் முக்கிய அறிவிப்பு! ஆம்! இன்று மாலை 4.30 மணிக்கு தேர்தல் தேதி அறிவிப்பு!

 

-MMH

     ட்டமன்ற தேர்தல் தேதி குறித்த விவரங்களை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் இன்று மாலை 4.30 மணிக்கு அறிவிக்க உள்ளார். நாடு முழுவதும் ஐந்து மாநிலங்களில், அதாவது தமிழகம், கேரளா, அசாம், புதுச்சேரி, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. சட்டமன்ற தேர்தல் குறித்து ஆய்வு செய்ய சமீபத்தில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தமிழகம் வந்தார்.

முன்னதாக அவர் அசாம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களுக்கு சென்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய நிலையில் தமிழகம் வந்த அவர் புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு சென்று ஆய்வு நடத்தினார்.

இங்கு முக்கிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் இன்று மாலை அவர் செய்தியாளர்களை சந்தித்து பேச உள்ளார். அப்போது தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

-Ln. இந்திராதேவி முருகேசன், சோலை. ஜெய்க்குமார்.

Comments