கோவை விமான நிலையத்தில் தங்கம் கடத்தல் 5 பேர் கைது!!

 

-MMH

     கோவை விமான நிலையத்திற்கு சார்ஜாவில் இருந்து தங்கம் கடத்த உள்ளதாக வருவாய் புலானய்வு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, கோவை விமான நிலையத்தில் வருவாய் புலனாய்வு துறை துணை இயக்குனர் சதீஷ் தலைமையில், அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.சார்ஜாவில் இருந்து, 'ஏர் அரேபியா' விமானத்தில் வந்த, சிவகங்கை, திருச்சி, சென்னை, ராமநாதபுரத்தை சேர்ந்த பயணிகள் சிலரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால், அவர்களிடம் தீவிர சோதனை நடத்தப்பட்டது. 

அதில் ஒரு பயணியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் பசை வடிவிலான தங்கம் அடங்கிய, 28 கேப்சூல்களை விழுங்கியதாக தெரிவித்தார். இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரிடம் இருந்து தங்கம் அடங்கிய கேப்சூல்கள் வெளியில் எடுக்கப்பட்டன. மேலும் நான்கு பேர், ஆசனவாய் பகுதியில், 'பேஸ்ட்' வடிவில் தங்கத்தை மறைத்து வைத்திருந்தனர்.ஐந்து பயணிகளிடமும் இருந்து  2.50 கோடி ரூபாய் மதிப்பிலான  தங்கம் பிடிக்கப்பட்டது. இதையடுத்து, ஐந்து பயணிகளும் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

-அருண்குமார் கோவை மேற்கு.

Comments