கூட்டுறவு வங்கிகளில் 6 சவரன் வரை விவசாயிகள் பெற்ற கடன் தொகை தள்ளுபடி!

 

-MMH

கூட்டுறவு வங்கிகளில் 6 சவரன் வரை விவசாயிகள் பெற்ற கடன் தொகை தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பின் மூலம் 16 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன் அடையப் போகிறார்கள் என்றும் அவர் தனது உரையில் தெரிவித்தார். சட்டசபையில் 110வது விதியின் கீழ் இன்று எடப்பாடி பழனிச்சாமி இந்த அறிவிப்பை வெளியிட்டதை கேட்டதும் அவை உறுப்பினர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வறட்சி, காலம் தவறிய மழை, வெள்ளம் போன்ற பல்வேறு இயற்கை பேரிடர்களை விவசாயிகள் சந்தித்து வருகிறார்கள். கடந்த ஆண்டை பொறுத்தவரை, கொரோனா பெருந்தொற்றால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. மேலும் கடந்த ஆண்டு நிவர் புயல் உள்ளிட்ட புயல்களாலும், கடந்த மாதம் பருவம் தப்பி பெய்த மழையினாலும் விவசாயிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். எனவே விவசாயிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பு அவர்களுக்கு இந்த அறிவிப்பு மிகப்பெரிய மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் கொடுத்துள்ளது. விவசாய சங்கத்தின் தலைவர்கள் பலரும் முதல்வர் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

நாளைய வரலாறு செய்திக்காக, 

-ராஜசேகரன்.

Comments