ஆஸ்பத்திரி வளாகத்துக்குள் 70 வயது மூதாட்டி கற்பழிப்பு!! - சைக்கோ வாலிபருக்கு வலைவீச்சு!!

     -MMH

     திருவொற்றியூர்: திருவொற்றியூர் காலடி பேட்டை மார்க்கெட் லேன் பகுதியை சேர்ந்த 70 வயது மூதாட்டி இரவு 10 மணி அளவில் வீட்டின் வெளியே நடந்து சென்றார். அப்போது அவ்வழியே வந்த மர்ம வாலிபர் மூதாட்டியிடம் பேச்சு கொடுத்து திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் அரசு ஆஸ்பத்திரி வளாகத்துக்குள் அழைத்து சென்றார். 

அங்கு மூதாட்டியை மிரட்டி கற்பழித்தார். பின்னர் மூதாட்டியின் தலையில் கல்லை போட்டு விட்டு தப்பிச்சென்று விட்டார். இதில் படுகாயம் அடைந்த மூதாட்டி அலறி துடித்தார். சத்தம் கேட்டு ஆஸ்பத்திரியில் இருந்த ஊழியர்கள் விரைந்து வந்து பார்த்த போது முகம் சிதைந்த நிலையில் மூதாட்டி அலறி துடிப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம். ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு மூதாட்டிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

சம்பவம் நடந்த ஆஸ்பத்திரி வளாகத்தில் போதிய மின்விளக்கு வசதிகள் இல்லை. பழைய வாக னங்களும் அப்புறப்படுத் தப்படாமல் உள்ளன. இதனை சாதகமாக பயன்படுத்தி சைக்கோ வாலிபர் மூதாட்டியை கற்பழித்தும், தலையில் கல்லை போட்டும் தப்பி சென்று இருப்பது விசாரனையில் தெரிந்தது. 

ஆஸ்பத்திரி வளாகத்துக்குள் மூதாட்டியை வாலிபர் அழைத்து செல்லும் காட்சி அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவாகி இருக்கிறது. இரவு 10.50 மணி அளவில் செல்லும் அவர் இரவு 11.40 மணி அளவில் அங்கிருந்து வெளியில் தப்பி ஓடுகிறார். இரவு நேரம் என்பதால் சைக்கோ வாலிபரின் முகம் சரியாக தெரியவில்லை. கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சியை வைத்து திருவொற்றியூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆஸ்பத்திரி வளாகத்துக்குள் 70 வயது மூதாட்டி கற்பழிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

-கார்த்திகேயன், தண்டையார்பேட்டை.

Comments