சிங்கம்புணரியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73ஆம் பிறந்தநாள் விழா!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு சிங்கம்புணரியில் அதிமுகவினர் அவரது படத்திற்கு மாலை அணிவித்துக் கொண்டாடினர். சிங்கம்புணரியில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளையொட்டி அதிமுகவினர் ஊர்வலமாக வந்து பேருந்து நிலையம் முன்பாக அமைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா அவர்களின் படத்திற்கு மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் பொன்மணி.பாஸ்கரன் மலர்தூவி மரியாதை செய்தார்.
மேலும் அங்கு திரண்டிருந்த நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் சிங்கம்புணரி ஒன்றிய பெருந்தலைவர் திவ்யாபிரபு, ஒன்றிய செயலாளர் சொ.வாசு, மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் திருவாசகம்,
இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் ஆபதாரணப்பட்டி பிரபு, எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் சசிகுமார், வெண்ணிலா வெங்கடேஷ்வரன், பேரூர் கழக துணை செயலாளர்கள் குணசேகரன், முன்னாள் கவுன்சிலர்கள் கக்கன் ராஜா, ராஜ்குமார், சதீஷ்குமார் மற்றும் பிரபு, ஐடிவிங் செயலாளர்கள் அஸ்வந்த், சேவுகமூர்த்தி, மகளிர் அணி ஒன்றிய பொறுப்பாளர் தவச்செல்வி, இளமொழி, முனீஸ்வரி, நித்யா மற்றும் ஒன்றிய பேரூர் நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
-அப்துல் சலாம்.
Comments