மன ரீதியாக புற்றுநோயை குணப்படுத்த வேண்டும்!! - ராசாமணி பேசினார்!!

     -MMH

புற்றுநோயை குணப்படுத்தும் அளவு மருத்துவம் மேம்பட்டிருந்தாலும் அதனை மன ரீதியாக எதிர்கொள்ளும் அளவுக்கு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படவில்லை என்று கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி பேசினார்.

உலக புற்று நோய் தினத்தை முன்னிட்டு கோவை ஜெம் மருத்துவமனையில் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.இதனை தொடர்ந்து ஜெம் மருத்துவமனையின் 'டாக்டர் பழனிவேலு  கேன்சர் சிறப்பு மையம்' திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ரசாமணி கலந்து கொண்டு புற்றுநோய் சிறப்பு மையத்தை திறந்து வைத்தார்.

இதனை தொடர்ந்து அவர் பேசுகையில், "ஜெம் மருத்துவமனை தமிழக மருத்துவ துறைக்கும், கோவையின் பாரம்பரியத்திற்கும் எடுத்துக்காட்டாக விளங்குகிறது.தற்போது உலக அளவில் பெயர் சொல்லும் அளவுக்கு மருத்துவமனையாக உள்ளது என்பதை பார்த்து வருகிறோம்.புற்றுநோயை நோயை குணப்படுத்த முடியும் என்ற சூழல் உருவாகியுள்ளது. ஆனால், மன ரீதியாக அதனை எதிர்கொள்ள நாம் தயாராக இல்லை என்பது எனது கணிப்பக உள்ளது. 

ஒரு காலகட்டத்தில் எய்ட்ஸ் நோய் குறித்து பேசக்கூட சங்கடப்படும் சூழல் இருந்தது. இப்போது அது குறித்து நாம் பயப்பட தேவை இல்லை என்ற அளவு மருத்துவத்துறை வளர்ந்துள்ளது. புற்றுநோயை குணப்படுத்த மருத்துவம் உள்ளது என்றாலும், தன்னிச்சையாக வந்து உடலை பரிசோதனை செய்துகொள்ளும் மனோபாவம் மக்களிடம் வரவில்லை.இந்த சூழலில், இந்த விதமான மையங்கள் காலத்தின் தேவையாக உள்ளது.

வரும் காலத்தில் புற்று நோய் என்பது பயம் தராத, மன அழுத்தம் தரக்கூடாத ஒரு நோயாக இருக்கும்."இவ்வாறு அவர் கூறினார்.இதனை தொடர்ந்து ஜெம் மருத்துவமனையின் தலைவர் பழனிவேலு செய்தியாளர்களிடம் கூறுகையில், " 24 மணி நேரமும் செயல்படும் வகையில் இந்த கேன்சர் சிறப்பு மையம் செயல்படும். இந்தியாவின் எந்த பகுதியில் உள்ள மக்களும் புற்றுநோய் தொடர்பான சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம். 

ரோட்டரி கிளப் மற்றும் ஜெம் மருத்துவமனை இணைந்து ஏழைகளுக்கு புற்றுநோய் சிகிச்சியை முழுவதும் இலவசமாக அளிக்கும் சேவையும் துவங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில், உணவு குழாய்,  நுரையீரல், மலக்குழாய், மலக்குடல், கர்பப்பை மற்றும் மார்பகம் உள்ளிட்ட பகுதிகளில் புற்றுநோய் ஏற்பட்டு பாதிக்கப்பட கூடியவர்கள் தான் 80 சதவீதமானவர்கள்." என்றார்.இந்த நிகழ்ச்சியில், தேசிய தேர்வு வாரிய இயக்குநர் பவனிந்திர லால், டி.எம்.ஐ.எம்.எஸ் துணை வேந்தர் திலிப் கோட் ஆகியோர் காணொலி காட்சி வாயிலாகவும், ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் மிட் டவுன் மாவட்ட ஆளுநர் ராஜசேகர் ஸ்ரீனிவாசன், ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் மெட்ரோபோலிஸ் தலைவர் ஜானகிராம் ராஜூ ஆகியோர் நேரடியாகவும் கலந்து கொண்டனர்.

- சீனி,போத்தனூர்.

Comments