மெட்ரோ ஸ்டேஷனுக்கு பாஷ்யம் பெயர்! யார் அந்த பாஷ்யம்? - வைகோ கேள்வி!

     -MMH

     கோயம்பேடு மெட்ரோ ஸ்டேஷனுக்கு பாஷ்யம் என பெயர் வைத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் செண்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயர் வைக்கப்பட்டது போல மெட்ரோ நிலையங்கள் சிலவற்றிற்கும் தலைவர்கள் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோயம்பேடு மெட்ரோ ஸ்டேசனுக்கு பாஷ்யம் கோயம்பேடு மெட்ரோ என பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் கோயம்பேடு பாலத்தில் பாஷ்யம் கோயம்பேடு மெட்ரோ என பெயிண்டால் எழுதப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள வைகோ 'யார் அந்த பாஷ்யம். கோயம்பேட்டை குத்தகைக்கு எடுத்தவரா? அவரது பெயர் ஏன் எழுதப்பட்டுள்ளது?' என கேள்வி எழுப்பியுள்ளார்.

-பாலாஜி தங்கமாரியப்பன், சென்னை போரூர்.

Comments