புதுச்சேரி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நாராயணசாமி!!

 

     -MMH

துணை நிலை ஆளுநர் தமிழிசையிடம் ராஜினாமா கடிதம் அளித்தார் முதல்வர் நாராயணசாமி.

புதுச்சேரியில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 4 பேர் அடுத்தடுத்து ராஜினாமா செய்தது நாராயணசாமி ஆட்சி கவிழ முக்கிய காரணமாக அமைந்துள்ளது. பாஜகவினரின் தூண்டுதலின் பெயரில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து நாராயணசாமி அரசுக்கு பெரும்பான்மை குறைந்தது. இதனால் நாராயணசாமி அரசு சட்டப்பேரவையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

அதன்படி இன்று சட்டப்பேரவை கூடிய ன்பிலையில் நாராயணசாமி அமைச்சரவை பெரும்பான்மையை நிரூபிக்க தவறியதால் ஆட்சிக்கு கவிழ்ந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்துள்ளார். இதையடுத்து சட்டப்பேரவையில் இருந்து புறப்பட்ட முதல்வர் நாராயணசாமி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் நாராயணசாமி, “புதுச்சேரி அமைச்சரவை ராஜினாமா செய்வதாக துணைநிலை ஆளுநர் இடம் கடிதம் கொடுத்துள்ளோம்.நியமன எம்எல்ஏக்கள் மூலம் ஆட்சி கவிழ்ப்பு செய்த எதிர்க்கட்சிகளுக்கு மக்கள் தண்டனை கொடுப்பார்கள்.என்.ஆர். காங்கிரஸ், அதிமுக ,பாஜகவுக்கு மக்கள் தண்டனை கொடுப்பார்கள். ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொள்ள வேண்டுமென துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கேட்டுள்ளோம் ” என்றார்.

நாளைய வரலாறு செய்திக்காக, 

-ஹனீப்.

Comments