திருப்பத்தூர் பேருந்து நிலைய கடைகள் ஏல விவகாரம்! வாலிபர் தீக்குளிக்க முயற்சி!

 

-MMH

திருப்பத்தூர் பேரூராட்சி பேருந்து நிலையத்தில் சுமார் 3.30 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கடைகளுக்கு ஒப்பந்தப்புள்ளி நடைபெறும் என்று அறிவிப்பு வெளியான நிலையில், ஒப்பந்தப்புள்ளி நடத்துவதற்காக இன்று பேரூராட்சி அலுவலகம் முன்பு 500 க்கும் மேற்பட்ட வியாபாரிகள் குவிந்தனர்.


இரண்டு முறை தேதி அறிவிக்கப்பட்டு வியாபாரிகள் மத்தியில் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு இல்லாமல் தேதி மாற்றம் செய்யப்பட்டது. மூன்றாவது முறையாக நேற்று காலை 10 மணிக்கு ஒப்பந்தப்புள்ளி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், புதிதாக கட்டப்பட்டுள்ள கடைகளுக்காக பழைய வியாபாரிகளும், புதிதாக ஒப்பந்தப்புள்ளி கோரியவர்களும் ஒரே நேரத்தில் கடைகள் வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்த நிலையில் இரண்டு மணி நேரமாக காவல்துறை துணை கண்காணிப்பாளர் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் திடீரென பேரூராட்சி  காம்பவுண்ட் சுவரில் ஏறிய இடையமேலூரைச் சேர்ந்த சந்திரன் என்பவரின் மகன் தினேஷ், பூக்கடையில் வேலை பார்க்கும் தொழிலாளியான இவர் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு திடீரென தீக்குளிக்க முயற்சி செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதனை அடுத்து அருகிலிருந்தவர்கள் அவரை காப்பாற்றினர். 

இருப்பினும் ஒப்பந்தப்புள்ளி கோரி வியாபாரிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பேரூராட்சி வளாகத்தின் முன்பு குவிந்தனர். இதனால் பேரூராட்சி வளாகத்தின் வெளியே காரைக்குடி, மதுரை செல்லும் சாலையில் சில மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  இதனையடுத்து ஏலம் எடுக்க வியாபாரிகள் யாரும் வராததாகக் கூறி தேதி குறிப்பிடாமல் ஏலத்தை பேரூராட்சி நிர்வாகம் ஒத்திவைத்தது.

-அப்துல்சலாம் திருப்பத்தூர்.

Comments