சிங்கம்புணரியில் இலவச கண் சிகிச்சை முகாம்!!

   -MMH

தானம் அறக்கட்டளை பல்வேறு சமூக பணிகளை ஆற்றி வருகிறது. அதன் இரு பிரிவுகளான வட்டார வயலகம் மற்றும் வட்டார களஞ்சியம் இரண்டு அமைப்புகளும், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து சிங்கம்புணரியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தின. சிங்கம்புணரி கலைஞர் மன்றத்தில் நடந்த இந்த முகாமில் சிங்கம்புணரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து 238 பேர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

முகாமில் கலந்துகொண்ட உறுப்பினர்களுக்கு சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், கண்ணில் ஏற்படும் நோய் குறித்து பரிசோதனை செய்யப்பட்டது. முகாமில் 31 பேருக்கு இலவசமாக கண்ணாடி வழங்கப்பட்டது.

அறுவை சிகிச்சைக்காக தேர்வு பெற்று இணை நோயால் பாதிக்கப்பட்டு மதுரை அரவிந்த் மருத்துவமனைக்கு பரிந்துரை பெற்றவர்கள் 16 நபர்கள். மேலும் இதில் 41 பேர் அறுவை சிகிச்சைக்காக மதுரை அரவிந்த் மருத்துவமனைக்கு வரும் வெள்ளிக்கிழமை அழைத்துச் செல்லப்படுகின்றனர். தங்குமிடம் அறுவை சிகிச்சை செலவுடன் துணைக்கு வருபவர் சாப்பாடு அனைத்தும் இலவசம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வை, தானம் அறக்கட்டளையின் கிராமப்புற நலவாழ்வு ஒருங்கிணைப்பாளர் முத்தையா, வட்டார களஞ்சியத்தின் பொறுப்பாளர் வள்ளி மற்றும் சிங்கம்புணரி வட்டார வயலக ஒருங்கிணைப்பாளர் பிரவீன் குமார் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

- ராயல் ஹமீது, சிங்கம்புணரி.

Comments