கும்பக்கரை அருவி இன்று முதல் திறப்பு! சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி..!

 

-MMH

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவி மீண்டும் திங்கள்கிழமை திறக்கப்படவுள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக கும்பக்கரை அருவி மூடப்பட்டு, சுற்றலாப் பயணிகள் அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருவதையடுத்து 11 மாதங்களுக்குப் பிறகு கும்பக்கரை அருவிக்கு செல்ல வனத்துறையினா் திங்கள்கிழமை அனுமதியளித்துள்ளனா். மேலும் அருவியில் குளிக்கவும் சுற்றலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேவதானப்பட்டி வனச்சரக அலுவலா் டேவிட் கூறியதாவது: கும்பக்கரை அருவி நீண்ட நாள்களுக்குப் பிறகு திங்கள்கிழமை திறக்கப்படவுள்ளது. சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூா் பொதுமக்கள் குளிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் அருவிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் முகக்கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட கரோனா தடுப்பு விதிமுறைகளைக் கடைப்பிடிக்கவேண்டும். திரவத்தால் கைகளை சுத்தம் செய்த பின்னரே அருவிக்கு செல்ல பொதுமக்கள் அனுமதிக்கப்படுவா் என்றாா்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஆசிக் தேனி.

Comments