சீரழிகிறதா சமூகம்? சொந்தச் சகோதரியையே கர்ப்பமாக்கிய சிறுவன்! குமரியில் அதிர்ச்சி!

 

-MMH

     கொரோனா ஊரடங்கில் செல்போனில் மூழ்கிய சிறுவன் ஒருவன், ஆபாச படம் பார்த்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு உடன்பிறந்த அக்காவையே கர்ப்பமாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குமரிமாவட்டம் புதுக்கடை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 12ஆம் வகுப்பு படிக்கும் 17 வயதான ஒரு சிறுமி, கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். இதைக்கண்ட உறவினர்கள் அந்தச் சிறுமியை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அந்தச் சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் 7 மாத கர்ப்பிணியாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, மாவட்ட குழந்தைகள் நல அலுவரை தொடர்பு கொண்டு சிறுமியின் கர்ப்பம் குறித்து தகவல் அளித்துள்ளனர். 

விரைந்து வந்த மாவட்டக் குழந்தைகள் நல அலுவலர், அந்தச் சிறுமியிடம் விசாரணை நடத்தியதோடு அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பின்னர் குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

புகாரில் அந்தச் சிறுமி 7 மாத கர்ப்பிணியாக இருப்பதாகவும், கர்ப்பத்திற்கு காரணம் அந்தச் சிறுமியின் உடன் பிறந்த தம்பியான 16 வயதான சிறுவன் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்தப் புகாரில் கூறியிருந்தார். புகாரின் பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த அனைத்து மகளிர் போலீசார், அந்தச் சிறுவனைப் பிடித்து விசாரணை நடத்தியதில், திடுக்கிடும் தகவல் வெளியானது. 

இவர்களின் தந்தை சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணி புரிந்து வருவதாகவும், அக்கா, தம்பி இருவரும் மனநலம் பாதிக்கப்பட்ட தாயுடன் புதுக்கடை அருகில் உள்ள கிராமத்தில் தனியாக வசித்து வந்ததாகவும், கொரோனா ஊரடங்கு காலத்தில் தந்தை சென்னையிலேயே இருந்து வந்த நிலையில், தாயை இருவரும் கவனித்து வந்ததாகவும்,

ஊரடங்கு காலத்தில் வீட்டிலேயே முடங்கிய சிறுவன் செல்போனில் மூழ்கிய நிலையில், ஆபாச இணையதளங்களுக்குச் சென்று ஆபாசப் படங்களை பதிவிரக்கம் செய்து பார்த்து வந்ததாகவும், ஆபாசப்படங்களை பார்த்து வந்த சிறுவனுக்கு காம போதை தலைக்கேற, கடந்த ஜுன் மாதம் முதல், இரவு நேரங்களில் தனது அக்காவிடமே பல தடவை பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் திடுக்கிடும் தகவலை வெளியிட்டார். 

இதனையடுத்து அந்தச் சிறுவனை கைது செய்த குளச்சல் அனைத்து மகளிர் போலீசார், அவனை நாகர்கோவில் சிறார் கூர் நோக்கு மையத்தில் ஆஜர்படுத்தி, நாங்குநேரியில் உள்ள சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். உறவுகளுக்கு இடையிலான பாலியல் அத்துமீறல்கள், சிறுமிகள் மீது பாலியல் பலாத்காரங்கள் ஆகியவை அதிகரிக்கும் போக்கு கவலையளிப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

-ராயல் ஹமீது.

Comments