தமிழக அரசு அறிவித்த வன்னியர்களுக்கான இட ஒதிக்கீட்டிற்கு கண்டனம்!!

-MMH 

       மிழக அரசு அறிவித்த வன்னியர்களுக்கு 10.5 % உள்ஒதுக்கீடு விவகாரம், தமிழக தேர்தலில் பிரதிபலிக்கும் என பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா சட்டமன்றத்தில்  நேற்று நிறைவேற்றப்பட்டது. இதற்கு பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பினர் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளனர். இது குறித்து கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அச்சங்கத்தினர்: 

வன்னியர்களுக்கு மட்டும் 10.5% தற்காலிக மசோதா அல்ல, அம்பாசங்கர் ஆணைய அறிக்கையின் பேரில் இயற்றப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் அம்பாசங்கர் ஆணைய அறிக்கையை அந்த ஆணையத்தின் உறுப்பினர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. பாமக நிறுவனர் ராமதாஸுக்காக மற்ற இனத்தவரை புறக்கணித்து அவர்களது நல்வாழ்வை பற்றி கவனத்தில் கொள்ளாமல் முதல்வர்  வெளியிட்ட அறிவிப்பை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் என தெரிவித்தனர். மேலும் தமிழக அரசின் இந்த மசோதா வரும் சட்டமன்ற தேர்தலில் பிரதிபலிக்கும். ஓரே ஒரு சமூகத்திற்காக மற்றவர்களின் உரிமைகளை பறித்துள்ளது என தெரிவித்துள்ளனர். மேலும் ஒரு சமூகத்திற்காக மற்ற சமுகத்தினரை வஞ்சிக்கும் கட்சிகளை தேர்தலில் புறக்கணிப்பதாக நெரிவித்தனர்.

- சீனி,போத்தனூர்.

Comments