எச்சரிக்கை வாசகத்தை மீறி விளம்பரப் பாலமாக மாறிவிட்ட சீனிவாசபுரம் பாலம்!!

     -MMH

     பொள்ளாச்சி மீன்கரை சாலை சீனிவாசபுரம் பாலம் இந்தப் பாலத்தில் விளம்பரம் செய்யாதீர் மீறினால் தண்டிக்கப்படுவீர்கள் என்று நாலாபுறமும் அச்சிடப்பட்டுள்ளது. 

இந்த எச்சரிக்கை வாசகத்தை மீறி  அதிமுக சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வரவேற்க மிகப்பெரிய அளவிலான விளம்பரப் பிளக்ஸ் பாலத்தின் சுவற்றில் அடிக்கப்பட்டது. முதல்வர் வந்து சென்று வாரங்கள் கடந்தும் இன்னும் அதை அப்புறப்படுத்தாமல் அப்படியே விட்டு விட்டனர். இதனைத் தொடர்ந்து மற்ற கட்சியைச் சேர்ந்தவர்களும் விளம்பர பிளக்ஸ் சுவற்றில் அடிக்க தொடங்கிவிட்டனர் மேலும் விளம்பர போஸ்டர்கள் அதிகளவில் ஒட்டப்பட்டு வருகிறது.

இப்படியே சென்றால் இன்னும் குறுகிய காலத்தில் இந்தப் பாலம் விளம்பரப் பாலமாக மாறிவிடும். இவ் வழித்தடத்தில் பயணிப்போர் விளம்பரங்களை பார்த்து கொண்டே செல்வதால் வாகன விபத்துக்கள் அதிக அளவில் நடக்க வாய்ப்பிருக்கிறது இதைக் கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக விளம்பர போஸ்டர்களை  அப்புறப்படுத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

நாளைய வரலாறு செய்திக்காக,

-M.சுரேஷ்குமார், கோவை தெற்கு.

Comments