கோவையில் பிரபல நிறுவனத்தின் பெயரில் போலி ஒயர்கள்! கடை உரிமையாளர் கைது..!!

 

-MMH

     கோவையில் பிரபல நிறுவனத்தின் பெயரில் விற்பனை செய்யப்பட்ட, 14.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான போலி ஒயர்கள் பறிமுதல் செய்து கடை உரிமையாளரை கைது செய்தனர்.டில்லியை தலைமையிடமாக கொண்டு, பிரபல தனியார் ஒயர் தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

நிறுவன மார்க்கெட்டிங் அலுவலர் ராஜ்குமார், கோவையில் உள்ள கடைகளில் கடந்த சில நாட்களாக ஆய்வு மேற்கொண்டார்.ஆய்வில், கோவையில் உள்ள ஒரு கடையில் அவரது நிறுவனத்தின் பெயரில் போலியான ஒயர் விற்பனை செய்யப்படுவது தெரிந்தது. அறிவுசார் சொத்துரிமை அமலாக்க பிரிவு போலீசாரிடம், ராஜ்குமார் புகார் தெரிவித்தார். சோதனையில், போலி ஒயர் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.இதையடுத்து, காந்திபுரம் காட்டூரை சேர்ந்த கடை உரிமையாளர் அனுப் சிங், 34 என்பவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். 14.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான போலி மின் ஒயர்களை பறிமுதல் செய்தனர்.

-அருண்குமார் கோவை மேற்கு.

Comments