ரிஷிகங்கா அணை குறித்து முன்னெச்சரிக்கை விடுத்துள்ள கிராம மக்கள்!!

     -MMH
     மிசோரி: உத்தரகாண்ட் மாநிலத்தின் ரிஷிகங்கா அணை குறித்து அப்பகுதிக்கு அருகிலுள்ள கிராம மக்கள் எச்சரித்தது இன்று மெய்யாகியுள்ளது. ஏனெனில், பனிப்பாறை வெடிப்பால் அந்த அணை மற்றும் நீர்மின்சார திட்ட கட்டமைப்பு அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

அதுவொரு சிறியளவிலான மின்சார உற்பத்தி செய்யும் நீர்மின்சக்தி திட்டமாகும். அந்த அணைக்கு அருகிலிருந்த ஒரு கிராமம் அப்படியே அடித்துச் செல்லப்பட்டுள்ளது. அக்கிராமத்தின் பெயர் ரெய்னி. இன்று அழிவிற்கு இலக்காகியுள்ள அக்கிராம மக்கள்தான் அன்றே இந்த திட்டம் தொடர்பான பின்விளைவுகள் குறித்து எச்சரித்தனர்.

இச்சம்பவத்தில், இதுவரை 14 பேர் இறந்துள்ளனர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 170 பேர் வரை காணாமல் போயிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மேலும், பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இந்த அணை கட்டப்படுகையில், பெரியளவிலான சேறு சரியாக அப்புறப்படுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. எனவே, இப்போது பனிச்சரிவு ஏற்பட்டவுடன், அந்த சேற்று மணலோடு சேர்த்து வந்த வெள்ளத்தால், மிக மோசமான விளைவுகள் ஏற்பட்டுள்ளன.

தற்போது, உத்திரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவு, கடந்த 2013ம் ஆண்டு அம்மாநிலத்தில் ஏற்பட்ட இயற்கைப் பேரழிவை நினைவூட்டுவதாக உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

-சுரேந்தர்.

Comments