தயாரிப்பாளர் மீது நடிகை பாலியல் புகார்! மயக்க மருந்து கொடுத்து என்னை..? நடிகை குமுறல்!

 

-MMH

      ளம் நடிகை, உறவுக்கு ஒத்துழைக்காமல் இருந்து வந்ததால், தனிப்பட்ட வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டியதுடன், வீடு புகுந்து தாக்குதல் நடத்தியதாக கல்லூரி உரிமையாளர் உட்பட 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டம் புழல் அடுத்த சூரபட்டு பகுதியில் வசித்து வருபவர் சமீரா (22). இவர் தமிழில் எதிரொலி, வஜ்ரம், வென்று வருவான் உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்நிலையில், இவர் புழல் காவல் நிலையத்தில் பரபரப்பான புகார் ஒன்றை அளித்துள்ளார். புகாரில் ஒரு பொறியியல் கல்லூரியின் உரிமையாளர் இடம் பெற்றுள்ளார்.

புகாரின் விபரம் வருமாறு:

'என் பெயர் சமீரா (22). எனது சொந்த ஊர் தஞ்சாவூர் அதிராமபட்டினம். திரைப்பட நடிகையான நான், எதிரொலி, வஜ்ரம், வென்று வருவான் உள்ளிட்ட திரைப்படங்களில் நடிகையாக நடித்துள்ளேன். ஒரு படத்தில் நடிப்பது தொடர்பாக எனக்கும், செங்குன்றத்தில் உள்ள கோடுவெளி பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி உரிமையாளர் கோவிந்தராஜ் என்பவருக்கும் அறிமுகம் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு கோவிந்தராஜ் சொந்தமாக ஒரு திரைப்படம் எடுப்பதாகக் கூறி அந்த படத்தில் என்னை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்தார். 

அதனைத் தொடர்ந்து புதுச்சேரியில் நடைபெற்ற படப்பிடிப்பின்போது கோவிந்தராஜ் தனக்கு மயக்க மருந்து கலந்து கொடுத்து என்னிடம் அத்துமீறி அதனை வீடியோவாக எடுத்துக்கொண்டார். அந்த வீடியோவை வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டி வந்த கோவிந்தராஜ், என்னை உறவுக்கு அழைத்து கட்டாயப்படுத்தி வந்தார். நான் அவரது மிரட்டலுக்கு பணியாததால், தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்தது வந்தார். எனது வீட்டில் மூன்று பெண்கள் மட்டுமே இருப்பதால், எங்களை அடித்துக்கொலை செய்தால் கூட யாருக்கும் தெரியாது என்றும் கூறினார்.

ஏற்கனவே கோவிந்தராஜ் மீது நான், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தேன். இந்த புகார் அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு விசாரணை நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், கோவிந்தராஜுக்கு வேண்டப்பட்ட ஜெயக்குமார் என்பவர் நான் அளித்த புகாரை திரும்ப பெற வேண்டும் என்று மிரட்டினார். இதற்கிடையில் கடந்த 17 ஆம் தேதி கோவிந்தராஜின் தூண்டுதலின் பேரில் ஜெயக்குமார், நக்கீரன், பூர்ணிமா மற்றும் அடையாளம் தெரியாத நான்கு பேர் நான் வீட்டில் இருந்தபோது வீடு புகுந்து என்னை அடித்து உதைத்து ஆபாச வார்த்தைகளில் பேசியதுடன் என்னைக் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி சென்றனர்.  

எனவே மேற்படி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்' என அந்த புகாரில் சமீரா கூறியுள்ளார். அதன் பேரில் புழல் காவல் நிலைய போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சமீரா கொடுத்துள்ள புகாருக்கு, கோவிந்தராஜ் தரப்பில் விசாரணை செய்த பின்னர் வழக்கு குறித்து மேற்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

-ராயல் ஹமீது.

Comments