சிங்கம்புணரி வட்டார வளர்ச்சி அலுவலர் இடமாற்றம்!!

     -MMH
     சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரியும் க.சாந்தியை தேவகோட்டைக்கு பணிமாறுதல் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

விரைவில் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி, நிர்வாக நலன் கருதி அரசு அலுவலர்களை பணியிட மாறுதல்கள் செய்யப்பட்டு வருகிறது.

சிவகங்கை மாவட்டத்தில் 19 வட்டார வளர்ச்சி அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டனர். அதன் ஒரு பகுதியாக சிங்கம்புணரி வட்டார வளர்ச்சி அலுவலர் க.சாந்தியை, தேவகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முகசுந்தரம் என்பவரது விடுப்பு பணியிடத்தில் பணிமாறுதல் செய்யப்பட்டார்.


சிங்கம்புணரி வட்டார வளர்ச்சி அலுவலர் க.சாந்தியின் பணியிடத்தில் திருப்புவனம் வட்டார வளர்ச்சி அலுவலராகப் பணிபுரிந்த கா.ரத்தினவேலு அவர்களை சிங்கம்புணரிக்கு பணிமாறுதல் செய்து மாவட்ட ஆட்சியர் மதுசூதனன் ரெட்டி ஆணை பிறப்பித்தார்.

- அப்துல்சலாம், திருப்பத்தூர்.

Comments