காந்தியை கூண்டுக்குள் கைது செய்து வைத்திருப்பது போல் தோன்றுகிறது!! - சமூக ஆர்வலர்கள் வேதனை!!

     -MMH

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் தமிழிசை சங்கம் சார்பில் கடந்த 1985ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி மகாத்மா காந்தி சிலை  நியூஸ்கீம் ரோட்டில் அமைக்கப்பட்டது. 

இந்த காந்தி சிலைக்கு காந்தி ஜெயந்தி, குடியரசு தினம், சுதந்திர தினம் உள்ளிட்ட முக்கிய தினங்களில்   சிலைக்கு அரசியல் கட்சியினர் மற்றும்  பல்வேறு அமைப்பினர், அதிகாரிகள் என கடந்த 36 ஆண்டு காலமாக மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கத்தில் உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் காந்தி சிலை மழையில் நனையாமல் இருக்க மேற்கூரை அமைக்கப்பட்டது.


இதனைத் தொடர்ந்து நகராட்சி சார்பில் சிலை பாதுகாப்பு நடவடிக்கையாக காந்தி சிலையை சுற்றிலும் இரும்பு கம்பிகள் கொண்டு கூண்டு அமைக்கப்பட்டுள்ளது.

இதை பார்க்கும் பொழுது காந்தியை கூண்டுக்குள் கைது செய்து வைத்திருப்பது போல் தோன்றுகிறது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். மேலும் இந்த  வழித்தடத்தில் பயணிப்போர் ஒருவர் கூறுகையில்  திறந்தவெளியில் இருந்ததால் நாள்தோறும் காந்தியின் முகத்தை பார்த்துக்கொண்டு தான் செல்வேன் இப்பொழுது சிலையை சுற்றிலும் கம்பி அமைக்கப்பட்டுள்ளதால் சரியாக பார்க்க முடியவில்லை இதனால்  வேதனை அளிப்பதாக தெரிவித்தார். 

ஒட்டுமொத்த பொள்ளாச்சி மக்களின் மனதில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது இந்த நிகழ்வு பல்வேறு தரப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கூண்டை அகற்ற போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடைபெற அதிக வாய்ப்புள்ளது.

-M.சுரேஷ்குமார், கோவை தெற்கு.

Comments