துரோகத்தால் உருவான கட்சி அதிமுக..!! - திமுக எம்பி கனிமொழி

     -MMH
     கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் திமுக, விடியலை நோக்கி ஸ்டாலின் என்ற தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம்  நடைபெற்றது.

இதில் பொள்ளாச்சி அடுத்த திப்பம்பட்டி பொது கூட்டத்தில் திமுக எம்பி கனிமொழி பொள்ளாச்சி பாலியல் வழக்கை போராடி CBI க்கு மாற்றியது திமுக தான் என்றும், அதிமுகவில் உள்ள நிறைய பேர் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடையவர்கள்.

ஆனால் அவர்களை அரசின் அதிகாரத்தை வைத்து தப்பித்து வருகின்றனர் அதிமுக நிர்வாகிகள் எனவும், மக்களுக்கு துரோகம் செய்யும் ஆட்சி அதிமுக இந்த ஆட்சி என பொள்ளாச்சி அடுத்த திப்பம்பட்டியில் பேசினார். திமுக ஆட்சியில் அனைவரையும் கைது செய்து கடுமையான தண்டனை கிடைக்கும் என எம்பி கூறினார்.

வரும் திமுக ஆட்சியில் ஆழியாறு நல்லாரு திட்டம் நிறைவேற்றப்படும், தேங்காய் எண்ணெய் ஆலை நிறுவபடும் என வாக்குறுதிகளை எம்பி கனிமொழி கூறினார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி.

Comments