தவக்காலம் தொடக்கம் கிறிஸ்தவ ஆலயங்களில் சாம்பல் புதன் வழிபாடு!

 

-MMH

      தேனி மாவட்டம் கம்பம், ராயப்பன்பட்டி பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் 40 நாள்கள் தவக்காலத்தையொட்டி, அதன் தொடக்கமாக சாம்பல் புதன்தினம் வழிபாடு நடைபெற்றது.

கிறிஸ்தவா்களின் 40 நாள்கள் தவக்காலம் புதன்கிழமை தொடங்கியது. கடந்த ஆண்டு குருத்தோலை ஞாயிறு அன்று ஊா்வலமாகக் கொண்டு சென்ற ஓலைகளை இந்தாண்டு புதன்கிழமை காலையிலேயே ராயப்பன்பட்டி புனித பனிமய அன்னை ஆலயத்திற்கு பக்தா்கள் கொண்டு வந்தனா். ஆலய பங்குத் தந்தை ஜோசப், குருத்தோலைகளை எரித்து, திருப்பலி நிறைவேற்றி ஆராதனை நடத்தி 40 நாள் விரதம் தொடங்குபவா்களுக்கு அந்த சாம்பலை பூசினாா். பின்னா் பக்தா்கள் வழிபாடுகளில் ஈடுபட்டனா்.

இதே போல் கம்பம் ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் நடைபெற்ற சாம்பல் புதன் நிகழ்வில் கிறிஸ்தவா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டு, சாம்பல் பூசி தவக்காலத்தைத் தொடங்கினா்.  

நாளைய வரலாறு செய்திக்காக,  

-ஆசிக்,தேனி. 

Comments